செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (07:02 IST)

ஆரம்பமே அபாரம்.. சிஎஸ்கேவுக்கு 2வது வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்றதை அடுத்து சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியின் ருத்ராஜ், ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகியோர்களின் அபார பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 207 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி தீபக் சஹார், தேஷ்பாண்டே, ரஹ்மான் ஆகியோர்களின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த வெற்றி காரணமாக சிஎஸ்கே அணி 4 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்கு அடுத்த போட்டியாக மார்ச் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது என்பதும் டெல்லியுடன் சிஎஸ்கே மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva