உலக குத்துச்சண்டை சான்பியன்ஷிப் தொடர்: அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

Arun Prasath| Last Updated: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (19:09 IST)
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ரஷ்யாவில் 52 கிலோ எடைப்பிரிவில் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர் அமித் பாங்கல் தோற்கடித்தார். நாளைய இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ரோவை அமித் பாங்கல் எதிர்கொள்ளவுள்ளார்.

மேலும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 இதில் மேலும் படிக்கவும் :