வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (17:08 IST)

ராயுடுவே வழிகாட்டி: பிளெமிங் புகழாரம்...

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை சிறிது காலம் தன் வசம் வைத்திருந்தார். தற்போது 535 ரன்களை எடுத்து பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
 
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னையின் வெற்றிக்கு பெரிதளவு பங்கு செலுத்தி வருபவர் ராயுடு.
 
ராயுடு குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது, அட்டவணையில் டாப் இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் ராயுடுதான்.
 
ரன் அட்டவணையில் அவர் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை. மிகவும் பாசிட்டிவாக ஆடுகிறார். ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஆகியோர் வலுவாக பங்களிப்பு செய்கின்றனர். 
 
ஆனால் ராயுடு ஒரு முன்னணி வழிகாட்டியாக உள்ளார். இவருடைய பார்ம் இப்படியே சிறப்பாக தொடர வேண்டும் என கூறியுள்ளார்.