பந்துவீச்சாளர்கள் ஏமாற்றத்தை அளித்தனர்: தோனி வருத்தம்!

Last Updated: வெள்ளி, 4 மே 2018 (16:56 IST)
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொலகத்தா அணியிடம் தோல்வி அடைந்தனர். 
 
இது குறித்து தோனி கூறியதாவது, ஓட்டு மொத்தமாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. 
 
எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் கடைசி வரை பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தேன். அவர்கள் தங்களது வேகம் மற்றும் சரியான திசைகளில் வீசுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 
 
பேட்ஸ்மேன்களின் பலம் பற்றி பந்து வீச்சாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடிதான் ஏற்படும். பேட்ஸ்மேன்கள் பலம் அறிந்து பந்து வீச வேண்டும். 
 
நாங்கள் எப்போதும் எப்படி பீல்டிங் செய்வோம் என்பதை அறிவேன். ஆனால், இப்போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கில் ரன்களை கொடுத்தால் நீங்கள் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். இந்த தவறுகள் தவிர்க்கப்படும் என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :