டம்மி த்ரோ: நிமிடத்தில் ஜடேஜாவை அலற வைத்த தோனி!

Last Updated: திங்கள், 14 மே 2018 (17:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 46வது போட்டியான நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், அதிரடியாக விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, ராயுடு சதத்தால் 19 ஓவர்களில் 2 விக்கெட்டு இழப்பில், 180 ரன்கள் எடுத்தது. 
 
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. ஆனால், இந்த போட்டியில் தோனி செய்த செயல் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
ஆம், சன் ரைசர்ஸ் அணி 7 வது ஓவர் ஆடிக் கொண்டிருக்கும்போது ஹர்பஜன் வீசிய பந்தை ஷிகர் தவான் லெக் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சிப்பார். 
 
ஆனால் தோனியோ விரைவாக ஓடிச் சென்று பந்தை எடுத்ததால்,  தவான் இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியை கைவிட்டார். ஆனால், எடுத்த பந்தை ஜடேஜாவின் மீது வீசுவது போல் பாவணை செய்து பின்னர் சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். 


இதில் மேலும் படிக்கவும் :