புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (16:54 IST)

ஜெயகுமார் அலப்பறைக்கு அலவில்லாம போச்சு... டென்ஷனான கிரிக்கெட் ரசிகர்கள்!

நியூஸிலாந்து அணி திமுக போல, ஆனால் இங்கிலாந்து அணி அதிமுக போல என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. 
 
காமராஜரின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜரின் சிலைக்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
 
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் உலகக்கோப்பை குறித்து பேசினார். அவர் பேசியதாவது உலகக் கோப்பையை நியூஸிலாந்து ஜெயிப்பது போல ஒரு மாயத்தோற்றம் தோன்றி, இறுதியில் இங்கிலாந்து வென்றது. 
 
நியூஸிலாந்து அணி திமுக போல, அது ஜெயிப்பது போலத் தோன்றலாம், ஆனால் இங்கிலாந்து அணி அதிமுக போல இறுதியில் வென்றுவிட்டது என தெரிவித்தார். 
 
முன்னதாக உலகக் கோப்பையில்தான் விளையாடியிருந்தால், இந்திய அணி ஜெயித்திருக்கும் என்று கூறி அனைவரையும் அதிரவைத்த இவர் தற்போது இப்படி பேசியுள்ளது தீவிர கிரிக்கெட் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.