1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (20:24 IST)

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
லாகூரில் கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது