ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறும் ஆஸ்திரேலியா..!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை எடுக்க ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளதை அடுத்து தற்போது அந்த அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 82 ரன்கள் எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் வலிமையாக இருக்கும் நிலையில் அந்த அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஹாசில்வுட், ஆடம் ஜாம்பா ஆகிய ஐந்து பேர் மாறி மாறி போட்ட போதிலும் ஹாசில்வுட் மட்டுமே ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் .
ஆப்கானிஸ்தான் விக்கெட்டை விழாமல் விளையாடிக் கொண்டிருப்பதால் கடைசி நேரத்தில் அதிரடியாக அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்கோர் 300ஐ நெருங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran