தொடர்புடைய செய்திகள்
- மெதுவாக விளையாடியது ஏன்.. விராட் கோலி அளித்த பதில்!
- 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. தென்னாப்பிரிக்காவின் மோசமான தோல்வி..!
- உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு செல்லும் 4 நாடுகள் எவை எவை?
- இங்கிலாந்து அணிக்கு இன்னொரு தோல்வி.. ஆஸ்திரேலியா அபார ஆட்டம்..!
- 400 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்த நியூசிலாந்து.. டக்வொர்த் லீவிஸ் முறையில் பாகிஸ்தான் வெற்றி..!
இன்று ஆப்கானிஸ்தானோடு மோதல்… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா ஆஸி?
இந்த உலகக் கோப்பை தொடரை மிகவும் மோசமாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பின்னர் சுதாரித்துக்கொண்டு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
7 போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்ற ஆஸி அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியோடு மோத உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு போட்டியிடும் அணிகளுள் ஒன்றாக இருப்பதால் இந்த போட்டி ஆப்கானிஸ்தானுக்கும் மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.