வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:35 IST)

மேத்யூஸுக்கு நடந்தது பரிதாபகரமானது… கம்பீர் வருத்தம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

தவறான ஹெல்மெட் எடுத்து வந்ததால் சரியான ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு இன்னொரு வீரர் வர 2 நிமிடத்திற்கு மேல் ஆனது என மேத்யூஸ் தரப்பு விளக்கம் அளித்த போதும் அதை வங்கதேச கேப்டன் ஷகீப் அல் ஹசன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இப்போது மேத்யூஸுக்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “மேத்யூஸுக்கு டெல்லியில் நடந்திருப்பது மிகவும் பரிதாபகரமானது” என அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ரசிகர்களும் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.