வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (15:00 IST)

இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

adam mlne
இந்திய தொடரில் இருந்து திடீரென விலகிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் அதை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. 
 
ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதனை அடுத்து டி20 ஆட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றுள்ள ஆடம் மில்னே என்பவர் இந்திய தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட தான் விரும்பவில்லை எனவும் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததை அடுத்து அவர் இந்திய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அவருக்கு பதிலாக பிளேக் டிக்னர் என்பவர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva