1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (22:20 IST)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அக்காரஸ்

ஸ்பெயின்  நாட்டில் நடைபெற்று வரும்  மாட்ரிட்  நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில்  ஸ்பெயின் வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், உலகிலுள்ள முன்னணி டென்னிஸ் வீரரகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், குரோசிய நாட்டு வீரர் போர்னா கொரிக்குடன் மோதினார்.

இருவருக்கும் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில், 4,3 என்ற  நேர்செட் கணக்கில் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.