வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (12:41 IST)

ரோஹித்தை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த ரசிகர் - புலம்பிய மனைவி

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதைப்பார்த்த அவரது மனைவி ரித்திகா புலம்பித் தள்ளியிருக்கிறார்.
 
விஜய் ஹசாரே தொடரில்  மும்பைக்காக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி போட்டியில் மும்பை பீஹார் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய பீஹார் அணி 69 ஓட்டங்களில் சுருண்டது.
 
பிறகு களத்தில் இறங்கிய ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார் அப்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்தில் போடப்பட்டிருந்த வேலியை தாண்டி ரோஹித்தை நோக்கி ஓடி வந்து, காலில் விழுந்து பின்னர் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். 
 
இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் சற்றுநேரம் திகைத்து போனார்கள், பின்னர் சுதாரித்துக் கொண்ட அம்பயர் அவரை வெளியே விரட்டி விட்டார். இதனைக்கண்ட ரோஹித் மனைவி ரித்திகா, ''ரோஹித்துக்கு முத்தம் கொடுப்பதில் உனக்கும்,எனக்கும் போட்டியாக இன்னொரு ஆள் வந்துவிட்டான்,'' என கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு டேக் செய்து கிண்டலடித்துள்ளார்.பதிலுக்கு சாஹல் இங்கு என்ன நடக்கிறது பாபி? என கேட்டிருக்கிறார்.