வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (04:24 IST)

3-வது டெஸ்ட்: அஸ்வின் மட்டுமே அதிகபட்ச ரன்கள் குவிப்பு

3-வது டெஸ்ட்: அஸ்வின் மட்டுமே அதிகபட்ச ரன்கள் குவிப்பு

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர், டாஸ் வென்று, பீல்டிங் தேர்வு செய்தார்.


 
இந்த அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும், தவானும் களம் இறங்கினார்கள். ராகுல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 19 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அத்துடன் 50 ரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு ரகானுவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. பின்னர், ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, ரகானே 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அஸ்வின் மற்றும் ரிந்திமன், பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அஸ்வின் 75 ரன்களுடனும்,  ரிந்திமன் சாஹா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு, 234 ரன்கள் எடுத்துள்ளது.