தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்: வணிகர் சங்கம் தடாலடி!
தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக அதிகம் பரவியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு போல திருமழிசை இல்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்து வந்ததனர்.
ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோயம்பேடில் சந்தை மீண்டும் திறப்பட்ட வேண்டும் என கோரப்பட்டு வந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.