1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:31 IST)

நேற்று மட்டும் 3 தங்கம்.. 87 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இந்தியா!

Asian Games
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அடுத்தடுத்து பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.



சீனாவின் பெய்ஜிங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இதில் விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 87 பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டியின் 13வது நாளான நேற்று மட்டும் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 180 தங்க பதக்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 335 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது.

159 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 157 பதக்கங்களுடன் தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.

Edit by Prasanth.K