1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona daily cases register 2 thousand

24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 20,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,37,50,599 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,25,709 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,81,441 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,43,449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மருத்துவ குணங்கள் மிகுந்த திரிபலா சூரணம் எதற்கு பயன்படுகிறது...?