ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (18:49 IST)

தோனி போன்றே கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆன ஸ்மித்: இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அந்த அணியுடன் மோதும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 14 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தாலும் ஸ்மித் மற்றும் கார்ரே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மித் 85 ரன்களும், கார்ரே 46 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் அதாவது 48வது ஓவரில் ஸ்மித், நேற்று தோனி ரன் அவுட் ஆனது போன்றே ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனவுடன் 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களும் விழுந்து ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 223 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இன்னும் சற்று நேரத்தில் 224 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது. இந்த இலக்கை எட்டி இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றால் கோப்பையை வெல்லும் அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது