1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 நவம்பர் 2021 (21:50 IST)

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்து கொடுத்த இமாலய இலக்கு!

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்ஸ் மிக அபாரமாக விளையாடி 85 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது என்பதும் சற்று முன் வரை அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது