1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (07:45 IST)

சென்னை ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது வீராங்கனை!

linda
சென்னை ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது வீராங்கனை!
கடந்த சில நாட்களாக சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது என்பதும் இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்று சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 17 வயதான செக் குடியரசு நாட்டின் இளம் வீராங்கனை லிண்டா போலந்து நாட்டின் வீராங்கனை மேக்னாவை எதிர்கொண்டார்
 
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் சுற்றில் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தாலும் அடுத்த இரண்டு சுற்றுகளை 6-3, 6-4 என்ற  செட்களை கைப்பற்றினார் சாம்பியன் பட்டம் வென்றார் லிண்டா
 
17 வயதில் சார்பில் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை லிண்டாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.