திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:47 IST)

காபி அடிக்கப்பட்ட IPL 2020 Anthem: உரிமை கோரும் ராப் பாடகர்!!

ஐபிஎல் 2020 பாடல் வேறு ஒருவரின் பாடலின் காப்பி என குற்றச்சாட்டு எழுத்துள்ளது. 
 
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது அரபு அமீரகத்தில் நடக்க முடிவாகியுள்ளது.
 
வரும் செப்டம்பர் 19 முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் ஐபிஎல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
 
இந்த முறை ஐபிஎல் 2020-க்கு தனி பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பாடல் தனது “தேக் கவுன் ஆயா வாபாஸ்" பாடலை தழுவி உருவாக்கியுள்ளதாக ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் அவர் ஐபிஎல் பாடலுக்காக உங்கள் பாடலை எடுத்துக் கொள்கிறோம் என்றும் என்னுடைய சம்மதத்தை எதையும் கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது புது சிக்கலை உருவாக்கியுள்ளது.