1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (20:38 IST)

வங்கதேசத்தை சொந்த மண்ணில் வீழ்த்தி பழி தீர்க்குமா இந்தியா?

வங்கதேசத்தை சொந்த மண்ணில் வீழ்த்தி பழி தீர்க்குமா இந்தியா?

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
 

 
நாளை முதல் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் போட்டி மார்ச் 6ஆம் தேதி வரை போட்டி முடிவடைகிறது. இதுவரை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்று வந்த ஆசிய கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு முதன் முறையாக 20 ஓவர் போட்டியாக நடைபெற உள்ளது.
 
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.
 
இந்த போட்டி ரவுண்டு ராபின் முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
 
சென்ற வருடம் இந்தியா - வங்கதேசம் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றிருந்தது. இதற்கு நாளைய போட்டியில் பலி தீர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
முன்னதாக இந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டி 20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் வலிமையான அணியாக திகழ்ந்து வருகிறது.
 
ஏற்கனவே அந்த அணியிடம் இந்தியா அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.
 
இந்திய அணி கேப்டன் தோனிக்கு பயிற்சியின்போது ஏற்பட்டுள்ள காயத்தால், நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகமே! அவருக்குப் பதிலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
 
1984ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
 
இதுவரை 12 முறை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அணி வீரர்கள்:
 
இந்தியா: மகேந்திர சிங் தோனி (கே), ஜாஸ்பிரிட் பும்ரா, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆஷிஸ் நெஹ்ரா, அஜிங்கே ரஹானே, பவன் நெகி, புவனேஸ்வர் குமார், பார்த்தீவ் பட்டேல், மொஹமது ஷமி.
 
வங்கசேதம்: மஷ்ரஃபே மோர்தஸா (கே), அல்–அமின் ஹொசைன், அபு ஹிதர், அராஃபத் சன்னி, இம்ருல் கயூஸ், மஹ்மதுல்லா, மொஹமது மிதுன், முஷ்பிஹுர் ரஹிம், முஸ்தபிஷுர் ரஹ்மான், நசிர் ஹொசைன், நூருல் ஹசன், சபீர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், அபுஹைதர், தஷ்கின் அஹமது.