தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

ஜே.பி.ஆர்.| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (10:27 IST)
நம்பர் நடிகையின் காதலர் பிரகாச நாயகன் இயக்குகிற படத்தை இயக்குகிறார். அதில் நாயகியாக நடிக்கும் மலையாள வரவுடன்  இயக்குனர் சிரித்து பேசுவதும், இல்லாத சீன்களிலும் நடிகையை நடிக்க வைப்பதும் படயூனிட்டில் பாட்டாகியிருக்கிறது. நம்பர் மாதிரி ஒரு தேவதை இருக்கையில் தேவையா இப்படியொரு வழிசல் என்று பேசாதவர்கள் இல்லை.

 
இயக்குனரின் இந்த வழிசல் நம்பர் நடிகைக்கு தெரிந்ததால்தான் நம்பர் நடிகை குறித்து திடீரென்று போற்றி பாடடி பெண்ணே  ஸ்டைலில் பேட்டி ஒன்று கொடுத்தாராம் இயக்குனர். எந்தப் பூவை கண்டாலும் படக்குன்னு பறக்குற ஆள் அவர். நம்பருடனான  அவரது காதல் எந்த கணத்திலும் உடையலாம் என்கிறார்கள்.
 
விழிப்பா இருங்கிற பெயர்ல தயாராகியிருக்கிற படத்தில் குற்றம்தான் தண்டனையும் படத்தின் நாயகன் நடித்திருக்கிறார். ஆனா,  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளைக் காணோம். பெயர்ல மீரான்னு இருந்தாலும் இயக்குனர் ரொம்பவே கூரான ஆளு.  பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராத நாயகனை விளாசிவிட்டார்.
 
இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தலயின் படத்தில் அவரது தம்பியாக தாடிக்கார நாயகன் நடித்தார். தல  படத்தில் நடிக்கிறதால உங்க படத்துக்கான படப்பிடிப்பை தள்ளி வச்சுக்கங்க என்று கேட்டிருக்கிறார்கள். இவரும் அப்படியே  தள்ளி வைக்க, அடுத்து படப்பிடிப்பு தொடங்க ஆறு மாதமானதாம். காரணம் அவ்ளோ ஆர்டிஸ்டை ஒருங்கிணைக்க  வேண்டியிருந்திருக்கிறது.
 
அப்படி அந்த நடிகரால ஆறு மாசம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. அவர் என்னடான்னா படத்தோட புரமோஷனுக்கே வராம  டிமிக்கி கொடுக்கிறாரு என்று பொது இடத்திலேயே நாயகனின் குணத்தை போட்டுடைத்தார். இனியாவது சம்பந்தப்பட்ட நடிகர்  திருந்துவாரா பார்ப்போம்.
 
அந்த பாடகி கொடுத்த இனிமாவில் திரையுலகமே பேதியாகிக் கிடக்கிறது. எந்த நேரத்தில் யாருடைய ராக்கால ரவுசுகள்  வளியாகுமோ என்று தெரியாமல் கோடம்பாக்கம் தவிக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் மூன்றெழுத்து நடிகர் இருப்பதாகவும்,  அவர்தான் தனது எதிரியான சக மூன்றெழுத்து நடிகர் குறித்த வீடியோவை வெளியிட காரணம் என்றும் கூறுகிறார்கள்.
 
வீக் என்ட் பார்ட்டியில் தவறாமல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதில்  தங்களின் வீக் என்ட் கும்மாளத்தை பதிவேற்றி வந்திருக்கிறார்கள். அந்த படங்களும் வீடியோக்களும்தான் இப்போது வரிசையாக  வந்து கொண்டிருக்கின்றன என ஒரு தகவல் உலவுகிறது.
 
சினிமாவின் சீக்ரெட் பக்கங்களை திறந்து காட்டும் இந்த ஆபரேஷனுக்கு தமிழக மக்களின் பேராதரவு இருப்பதுதான் ஆச்சரியம்.


இதில் மேலும் படிக்கவும் :