1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (13:33 IST)

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

aa26
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் அல்லு அர்ஜுன் முக்கியமான பேன் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார்..

இவரின் திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வசூலை குவிக்கிறது. ஒருபக்கம் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் ஆகிய படத்தை கொடுத்த அட்லீ அல்லு அர்ஜுனுடன் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஹாலிவுட் பட ஸ்டைலில் இந்த படத்தை உருவாக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தில் பல ஹாலிவுட் கலைஞர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என அட்லி தெரிவித்திருக்கிறார்..

aa26

அதாவது, நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாவதாக அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்..