1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (13:22 IST)

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

trisha
லேசா லேசா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் திரிஷா.. அதன்பின் பல வருடங்கள் பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரிஷாவை பற்றி எப்போதும் பல செய்திகளும், பல வதந்திகள் வருவதுண்டு.. அவருக்கு அந்த நடிகருடன் காதல், இந்த நடிகருடன் காதல் என பல வதந்திகள் இதற்கு முன்பு வந்திருக்கிறது.. அதேபோல், நடிகர் விஜயுடன் திரிஷா ஒரு திருமணத்தில் கலந்துகொண்டதும் சர்ச்சை ஆனது.

அதேபோல் திரிஷா சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா ‘நான் கேள்விப்பட்ட வரைக்கும் நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன்.. ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன்.. இரண்டு வயதில் எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது, வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது உங்களின் கற்பனை முடிந்து விட்டதா?’ என நக்கலாக பதிவிட்டிருக்கிறார்..