1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
  4. Cine Popcorn - Hollywood, Bollywood and Tollywood

சினி பாப்கார்ன் - ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்

சினி பாப்கார்ன்
ஹாலிவுட்


 

 
டாம் க்ரூஸ் என்றதும், மிஷன் இம்பாஸிபிள் சீரிஸ்தான் நினைவுக்குவரும். ஹாலிவுட் நடிகர்கள் இதுபோன்ற சீரிஸ்களில் நடிக்கும் போதுதான், (படம் மொக்கையாக இருந்தாலும்) கவனிக்கப்படுகிறார்கள்.
 
டாம் க்ரூஸுக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்று, 2012 -இல் வெளியான, ஜாக் ரீச்சர். ஜாக் ரீச்சர் என்பது படத்தில் டாம் க்ரூஸின் கதாபாத்திரப் பெயர்.
 
தவறு எங்கு நடந்தாலும் தேடி வந்து குற்றவாளிகளை கொல்வதுதான் ஜாக் ரீச்சரின் வேலை. அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் யாருக்கும் தெரியாது. நம்ம சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி. எப்ப வருவார், எப்படி வருவார் யாருக்கும் தெரியாது.
 
ஜாக் ரீச்சர் யுஎஸ்ஸில் 80.10 மில்லியன் டாலர்களை வசூலித்தது. வெளிநாடுகளில் இன்னும் அதிக லாபம். மொத்தமாக, 218 மில்லியன் டாலர்களை படம் தனதாக்கியது.
 
இந்த டாலர் கணக்கு காரணமாக ஜாக் ரீச்சரின் இரண்டாம் பாகத்தை நியூ ஆர்லியன்ஸில் தொடங்கியிருக்கிறார்கள். எட்வர்ட் ஸிவிக் படத்தை இயக்குகிறார். அடுத்த வருடம் அக்டோபர் 21 படம் வெளியாகிறது.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

பாலிவுட்
 
 
இதுவும் ஒரு சீரிஸ்தான். 100 கோடிகளுக்கு மேல் வசூலித்த பாலிவுட் சீரிஸ், ஹவுஸ்ஃபுல்.


 

 
தமிழில் சுமாராகப் போன, காதலா காதலா, மலையாளத்தில் சில லட்சங்களில் எடுத்த, மாட்டுப்பட்டி மச்சான் ஆகிய படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து, ஹவுஸ்ஃபுல், ஹவுஸ்ஃபுல் 2 என்ற பெயர்களில் எடுத்தனர். இரண்டும் செமத்தியான லாபம் பார்க்க, மூன்றாவது பாகத்தை தொடங்கியுள்ளனர். எப்போதும் போல, அதே நடிகர்கள், நடிகைகள் மட்டும் வேறு.
 
சஜித் நடியட்வாலா தயாரிக்கும் இந்த மூன்றாவது பாகத்தை சஜித் - பர்கத் இயக்குகிறார். அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக், லிசா ஹைடன், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸா நர்கிஸ் பக்ரி ஆகியோர் நடிக்கின்றனர். 2016 ஜுன் 3 -ஆம் தேதி இந்த மூன்றாம் பாகம் வெளியாகிறது.
 
இது எந்தப் படத்தின் தழுவல் என்பதை அறிவிக்கவில்லை. படம் பார்த்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

டோலிவுட்

பாகுபலி படம் மட்டும் வரவில்லை என்றால் அனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு இன்னும் மரியாதையும், வரவேற்பும் கிடைத்திருக்கும்.


 

பாகுபலியை பார்த்த பின் ருத்ரமாதேவியை பார்ப்பது, ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக்கை ஸ்டீம் போட்டில் எடுத்த மாதிரி ஒரு அயர்ச்சி.
 
படம் வெளுத்து வாங்குகிறது என்று சொன்னாலும், ரொம்ப சுமாராகவே போகிறது. தெலுங்கில் படம் வெளியாகி பத்து தினங்கள் கடந்த நிலையில், வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஓபனிங் வசூலில் ருத்ரமாதேவி அறுவடை செய்ததுதான் அதன் ஒரே பலம். வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல ஓபனிங். யுஎஸ்ஸில் முதல் பத்து தினங்களில் 5.85 கோடிகளை படம் வசூலித்திருக்கிறது. பாகுபலி வசூலில் இது எட்டில் ஒரு பகுதிதான் என்றாலும், ருத்ரமாதேவியின் குவாலிட்டிக்கு இதுவே அதிகம்தான்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

மாலிவுட்
 
மலையாளப்பட இயக்குனர் ஆஷிக் அபுவின் கடைசிப் படம், கேங்ஸ்டர் பிளாப்பானது.


 

 
மம்முட்டி நடித்த இந்த மெகா பட்ஜெட்டின் தோல்வியைத் தொடர்ந்து, ஆஷிக் அபுவை மீடியாக்களும், ரசிகர்களும் கழுவி ஊற்றினர். வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி படம் எடுக்கும் ஆஷிக் அபு மீது அவர்களுக்கு அப்படியொரு காண்டு. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று.
 
ஆனால், உண்மை அதுதான். ஆஷிக் அபு இன்றைய மலையாள சினிமாவின் முக்கியமான அப்பாடக்கர். டா தடியா, சால்ட் அண்ட் பெப்பர், 22 பீமேல் கோட்டயம், இடுக்கி கோல்ட் போன்ற அவரது படங்கள் மிக முக்கியமானவை. ஸ்டார் நடிகர்கள் இல்லாமல் அவர் இயக்கியவை. கமர்ஷியல் தடத்திலிருந்து விலகியவை.
 
அவரது புதிய படம், ராணி பத்மினியின் ட்ரெய்லர்தான் இப்போது மலையாள திரையுலகின் ஹாட் டாபிக். மஞ்சு வாரியரும், ரீமா கல்லிங்கலும் நடித்துள்ள இந்தப் படம் மலையாள சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என ட்ரெய்லரே கட்டியம் கூறுகிறது.
 
ராணி பத்மினிக்கு கேரளாவே வெயிட்டிங்.