திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விளக்கு ஏற்ற எந்த வகையான எண்ணெய்களை பயன்படுவது நல்லது...?

நெய் - நினைத்தது நடக்கும், கடன் அடையும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். நல்லெண்ணெய் - நம்மையும் நம் குடும்பத்தையும் பிடித்த நோய்கள் நீங்கும் நவகிரகங்களின் பரிபூரண அருள் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் - குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். விளக்கெண்ணெய் - புகழ் உண்டாகும், குலதெய்வ ஆசி உண்டாகும்.
 
வேப்ப எண்ணெய் - கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இலுப்பை எண்ணெய் - உடல் வளம் பெரும்.
 
வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும். நெய், வேப்ப எண்ணெய்  மற்றும் இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும்.
 
விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்,  நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அன்னை பராசக்தி அருள் உண்டாகும், கிரகதோஷம் நீங்கும்.
 
பொதுவாக குத்துவிளக்கில் பல முகங்கள் உண்டு, அதன் ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு முக குத்துவிளக்கு - மத்திம பலன் உண்டு.
 
இருமுக குத்து விளக்கு - கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும். மூன்று முகம் கொண்ட குத்து விளக்கு - குடும்ப விருத்தி உண்டாகும்.
 
நான்கு முகம் கொண்ட குத்துவிளக்கு - மனை மற்றும் கால்நடை விருத்தி உண்டாகும். ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு - சகல சௌபாக்கியம் உண்டாகும்.