ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குத்து விளக்கில் வாசம் செய்யும் தெய்வங்களும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

விளக்குகள் செய்ய தற்போது பித்தளை, வெண்கலம் மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. குத்துவிளக்குகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயரங்களில் செய்யப்படுகின்றன. 

குத்துவிளக்கு, கிளை விளக்கு, பஞ்சலோக விளக்கு மற்றும் காமாட்சி அம்மன் விளக்கு என ஏராளமான விளக்குகள் உள்ளன.
 
மனிதர்களுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போல குத்து விளக்கிலும் ஐம்புலன்களை உள்ளதாக நம் முன்னோர்கள் சொல்கின்றனர். நம் ஒவ்வொரு புலன்களிலும் ஒவ்வொரு இறைவன் வாசம் செய்வதை போல குத்துவிளக்கிலும் மும்மூர்த்திகளும், தேவிகளும் வாசம் செய்வதாக நம் சான்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அவை பின்வருமாறு,
 
குத்துவிளக்கின் அடிப்பகுதி - படைப்புக் கடவுளான பிரம்மா வாசம் செய்கிறார். குத்துவிளக்கின் நடுப்பகுதி - காக்கும் கடவுளான விஷ்ணு வாசம் செய்கிறார்.
 
குத்துவிளக்கின் உச்சிப் பகுதி - அழிக்கும் கடவுள் பரம்பொருளான சிவன் வாசம் செய்கிறார். குத்துவிளக்கில் இருக்கும் ஒளிச்சுடர் - மகாலட்சுமி வாசம் செய்கிறார்.
 
குத்துவிளக்கில் உருவாகும் வெளிச்சம் - அறிவுக் கடவுளான சரஸ்வதி வாசம் செய்கிறார். குத்துவிளக்கில் உண்டாகும் வெப்பம் - பார்வதி தேவி வாசம் செய்கின்றார்.
 
பல முகங்கள் கொண்ட குத்துவிளக்குகள் இருந்தாலும், ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கே இறை வழிபாட்டிற்கு சிறந்தது. கிளை விளக்கு என்பது குத்து விளக்கில் பல கிளைகள் செய்யப்பட்டு சங்கிலியால் பிணைகப்பட்டு இருக்கும். விளக்கின் உச்சியில் மயில், அன்னம் மற்றும் இறைவனின் வடிவங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும்.