1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில பயனுள்ள ஆன்மீக குறிப்புகள் !!

பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் சிறுதவறும் பெரும் கேடுக்கு வழி வகுக்கும். அதனால், தினசரி வாழ்வில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல்  தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். 
 
கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு  மட்டும் சென்று வரலாம்.
 
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள்,  உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 
திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது. அப்படி அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி பாதிப்பு அடையும். அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
 
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. கோவிலில் தெய்வத்தை வணங்கும்பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
 
வெள்ளி, செவ்வாயில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும். இது தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து ஆன்ம அமைதியை கொடுக்கும்.சூரியன் உதயத்திற்கு முன்பு எழும் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறுவார்கள்.