வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:48 IST)

மந்திரங்களை உச்சரிக்க ஏற்ற இடங்களும் பலன்களும் !!

ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

சில மந்திரங்கள் காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க வேண்டும். சில மந்திரங்கள் திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும். ஆனால், ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.
 
இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்கவேண்டும். தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.
 
ஆலய பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும் நிறைய பேர் என்னவோ… ஏதோ என நினைத்து பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே விட்டு விடுகிறார்கள்.
 
சிலர் எல்லா மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று நினைப்பார்கள். இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக, மிக எளிமையானவை.
 
தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குலதெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம். இந்த மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
 
‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வது கூட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது. திருமந்திரம், பெரியபுராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.
 
பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடைப்பதை காணலாம்.