1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (11:39 IST)

சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள் பற்றி பார்ப்போம்...!!

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு மற்றும் நாய்களுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும் அல்லது நரஸிம்ஹர் படம் அல்லது ஸ்லோகம் கேட்க  பய உணர்வு அகலும்.
 
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது துளசி வில்வம் சட்டை பையில் போட்டு எடுத்து செல்ல விபத்துக்கள் கண்டிப்பாக ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதிகமாக இருக்காது.
 
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் மற்றும் மஹா லஷ்மி படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
 
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
 
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும் அல்லது வேப்பிலை கொத்து முன்வாசலுக்கு மேல் கட்டி தொங்க விட வேண்டும்
 
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்து மற்றும் மாஇலை தோரணம் அடிக்கடி தொங்க விட வேண்டும்.
 
அதிகாலையில் ப்ரம்ஹ முகூர்த்தத்தில் விளக்கு ஏற்ற எல்லா விதமான துன்பங்களும் பரந்து ஓடும்.