திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கார்த்திகை மாத சோமவார விரத பலன்கள் !!

சோமவார விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும் முடிக்கலாம். ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.
 
சோமவார விரதம் இருப்பவர்கள் சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருப்பது அவசியம். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு கொண்டு போய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். விர நாளில் யாரிடமும் கோபமாக பேசக்கூடாது. முடிந்த வரை மவுன விரதம் இருப்பது நல்லது.
 
இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள். 
 
பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் கடைபிடித்தார். விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி.
 
கார்த்திகை மாத சோமவார விரதம் இருப்பவர்கள் மாலையில் சிவ ஆலயம் சென்று அங்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இதன் மூலம் பலன்கள் அதிகரிக்கும்.