திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை விரதம்

செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில்  விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும். 
முருகப் பெருமானுக்கு மூன்று விரதங்கள் உகந்த விரதங்களாக கூறப்படுகிறது. 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம் ஆகியவையாகும். வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில்  அனுஷ்டிப்பது.
 
செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. செவ்வாய்க் கிழமைதோறும் காலையில் நீராடி, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். மேலும் விரதத்தின்போது கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6  மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம்  நடக்கும். மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.