திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விலங்குகளை வைத்து சகுனம் பார்ப்பது நல்லதா கெட்டதா...?

நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக, பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கிட்டால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்  போன்றவையாகும்.
இரவு நேரத்தில் வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். கழுதை கத்தினால் நல்ல சகுனம். காரணம், அது  உறவைத் தேடிக் கத்துகிறது. காக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது. பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது.  கூட்டிப் பெருக்கும்போதோ, ஒன்றை அப்பால் தள்ளும்போதோ, வலமிருந்து இடமாகத்தானே தள்ளுகிறோம்!
 
அதுபோல், எழுதும்போதோ, கோடு போடும்போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம். அதனால், பூனை இடமிருந்து வலமாகப் போனால் துன்பம் வருகிறது.  காரணம், எழுத்திலே செலவும் எழுதலாம்; வரவும் எழுதலாம்; இல்லையா? மண ஓலையும் எழுதலாம்; மரண ஓலையும் எழுதலாம்; இல்லையா? இடமிருந்து  வலம் எப்போதும் சந்தேகத்திற்கு உரியது. அதனால் ‘யானை, வலம் போனாலும், பூனை வலம் போகக்கூடாது’ என்பார்கள்.
 
‘நரி வலம் நல்லது’ என்பார்கள். சிலர் நரி எந்தப் பக்கம் போனாலும் நல்லது என்பார்கள். குரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே  அவலமாக, மரண ஓலமாகப் படுகிறது. அதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்பினார்கள். வாழ்க்கை முழுவதையும் மங்கலம், அமங்கலம்  என்று பிரித்த இந்துக்கள், சகுனத்தையும் ‘மங்கலம், அமங்கலம்’ என்று பிரித்தார்கள்.