1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (13:20 IST)

தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஸ்ரீ சொர்ண பைரவர் ஹோமம்

பணம் இல்லாமல் வாழ்வது என்பது உலக வாழ்வில் சிரமம் அதுபோல் அருள் இல்லாமல் வாழ்வது என்பதும் மிக மிக சிரமம் என்பது அனைவரும் அறிந்ததே. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்பதின் பொருள், அருளும், பொருளும் ஒருங்கே கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி தான். இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய வழி இருக்கிறதா? ஆம். இருக்கிறது என்கிறார் ஸ்ரீ தன்வந்திரி பிடாதிபதி ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள். அது என்ன? அது தான் சொர்ண பைரவர் ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் அடையலாம்.
பொதுவாக எல்லோரும் கடவுள் வழிபாடு செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு வழிபாட்டின் பலன் வந்து சேருவது தாமதமாகும் அல்லது பலன் கிடைக்கமலேயே போய் விடும்.வழிபாடு செய்வதற்கென்றே சில நியமங்கள் உள்ளன. மேலும் வழிபாட்டை துவக்கும் நாள், கிழமை, நேரம் ஆகியன மிகவும் முக்கியமானது.
 
திருமகள் அருள் தரும் சொர்ண பைரவர் வழிபாடும் ஹோமமும் ஆகும். பொதுவாக ஒருவர் வழிபாடு செய்ய உகந்த காலம் என்று பார்க்கும் போது அவரவர்  பிறந்த நட்சத்திரம், திதி, கிழமை இவற்றில் வழிபாடு செய்யலாம். நம்மில் சிலருக்கு பிறந்த ஜாதகம் இருக்காது. அவர்களின் நட்சத்திரம், திதி, கிழமை தெரியாது.  எனவே நாம் எல்லோருக்கும் பொதுவாக சொர்ண பைரவர் வழிபாடு நடத்த ஒரு அற்புதமான நாள் உண்டு. அது தான் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்  ஆகும். திருவாதிரை நட்சத்திரம் நம் ஆதி சிவன் அவதாரம் செய்த நட்சத்திரம் ஆகும்.
 
திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் நாம் செய்யும் தானம், செபம், வழிபாடு இவற்றிற்கு கோடி மடங்கு பலன் உண்டு. அப்படியென்றால் பைரவர் வழிபாட்டை தேய்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பரணி நட்சத்திரம், செவ்வாய் கிழமை, ராகு காலம் இவற்றில் செய்யக்கூடாதா? கண்டிப்பாக செய்ய வேண்டும். இதில்  மாற்று கருத்தே இல்லை. ஆனால் இவற்றையும் விட சக்தி வாய்ந்த நாள் தான் திருவாதிரை நாள் ஆகும். வழிபாடு செய்ய நாம் முதலில் அதற்குரிய  நியமங்கள் கடைபிடித்து வழிபாடு செய்தால், அளவில்லா பொருளும் அருளும் தருவார் ஸ்ரீ சொர்ண அகர்ஷண பைரவர்.
 
இந்த யாகத்தின் மூலம் கர்ம வினைகள் நீங்கும், சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக கிடைக்கும், எல்லா விதமான தோஷங்களும் நீங்கும், எல்லா கடன்களும் தீரும், குரையில்லா செல்வம் வந்து சேரும், வராத கடன்களும் வசூல் ஆகும், தொழில் துறையில் பெரிய வளர்ச்சியை காணலாம், நியாயமான  பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் தானாக வந்தடையும், நல்ல முறையில் பண வரவு உண்டாகும், நிரந்தர வேலை இல்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்,  மறைமுக எதிரிகள் தொலைந்து போவார், செய்வினை கோளாறுகள் நீங்கி அனைத்து செல்வங்களும் கிடைக்கும், மிகுந்த புண்ணியம் சேரும், அட்டமா  சித்துக்களும் கிடைக்க பெறுவார், நிரந்தரமான மனநிம்மதி கிட்டும், பிறவியில்லா பெருநிலை உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், தம்பதிகள்  இடையே ஒற்றுமை உண்டாகும், சாபங்கள் நீங்கும், எல்லா வித நோய்களும் தீரும், நன்மக்கட் பேறு உண்டாகும், .அக்ஷ்ட லட்சுமிகளின் அருள் அனைத்து  இல்லங்களில் உண்டாகும், லக்ஷ்மி மற்றும் குபேரன் இவர்ளுக்கு இணையான செல்வம் உண்டாகும், வீட்டில் கால் நடைகளின் விருத்தி உண்டாகும், விவசாயம்  பெருகும், சித்தர்களின் அருளுடன் எல்லா பிரச்சனைகளும் தீரும், வழக்குகள் அனைத்தும் தீரும், தவறான பழக்கங்களிலிருந்து மீண்டு வரலம், கிரகங்கள்  அனைத்தும் நன்மையே செய்யும், பலவகை யோகங்களும் உண்டாகும். பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும்.
 
மேற்கண்ட யாகம் இலுப்பை எண்ணெய், பூசணிக்காய், உலர் பழ வகைகள், மஞ்சள், குங்குமம், சிகப்பு நிற பழங்கள், உளுந்து வடை, உளுந்து சாதம், சிவப்பு நிற  புஷ்பங்கள், பெயர் சொல்லா பயன் தரும் மூலிகைகள் கொண்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீட்த்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 14.06.2018 வியாழக் கிழமை ஆனி மாத திருவாதிரை நக்ஷத்திரம் முதல் 11 மாதங்கள் திருவாதிரை  நக்ஷத்திரம் வரக்கூடிய நாளில் எம்பெருமான், ஸ்ரீ மரகதம்பிகை சமேத மரகதேஸ்வரர், அஷ்டபைரவர், மஹா பைரவர் அருளுடன் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத  சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு ஹோமம் பிரதி மாதம் மாலை வேலையில் “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ” என்ற மூல மந்திரத்துடன்  நடைபெற்று, அவல் பாயசம், தாம்பூலம், வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து மலர்கள் கொண்டு ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற  உள்ளது.