புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகாலட்சுமி வாசம் செய்யும் தனிச்சிறப்பு மிக்க வில்வ இலை !!

அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது. முன் நாட்களில் பறித்து கொள்ள வேண்டும்.

வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம். வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.
 
பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ  மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள். இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். 
 
வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. 
 
வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு. வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம்.
 
மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள். மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். 
 
வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள். வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன்  இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள்.