செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஸ்ரீ சக்கரத்தினை வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

அகிலாண்டேசுவரியான காமாட்சிதேவியின் சக்தியானது மிகவும் உக்கிரமாக இருந்தபோதும் சாந்தடையச் செய்ய வேறு வழி தெரியாமல், அம்பிகையின் எதிரில் ஸ்ரீ  சக்கரத்தை நிறுவி ஆகர்சித்து பின்சாந்தமுறச் செய்தனர்.

ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால்  இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.
 
ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று  போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.
 
சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ  சக்கரமானது.
 
சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதைகள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிமிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த எண்ணிக்கை அறுபத்து நான்கை  மையப்படுத்தி ஸ்ரீசக்கரத்தை வடிவமைத் தார் பூஜ்ய ஸ்ரீஆதிசங்கரர்.
 
மனிதன் தன்னை கட்டுப்படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.
 
ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்கரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.