ஒவ்வொரு ராசிக்கும் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!!

வெற்றிலை என்பது தாம்பூலத்திற்கும், விஷேச வீடுகளில் சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடவும் பயன்படுத்துகிறோம். வெற்றிலை மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் உள்ளது. வெற்றிலையை கொண்டு பரிகாரமும் செய்யலாம் என்பது தெரியாத விஷயம். அதை பற்றி  பார்ப்போம். 
எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
 
மேஷம் - வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும். 
 
ரிஷபம் - வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் சேரும். 
 
மிதுனம் - வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் விலகும். 
 
கடகம் - வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும். 
 
சிம்மம் - வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும். 
 
கன்னி - வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வததை வழிப்பட்டால் கவலைகள் தீரும். 
 
துலாம் - வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும். 
 
விருச்சிகம் - வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும். 
 
தனுசு - வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும். 
 
மகரம் - வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும். 
 
கும்பம் - வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும். 
 
மீனம் - வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய் தீரும்.


இதில் மேலும் படிக்கவும் :