செல்வத்தை அள்ளித்தரும் குபேர வழிபாடு...!!

குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.மேலும் குபேர இயந்திரம்,குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள்.  ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.
ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை:
 
செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது.இந்த பூஜையானது  தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று  கொண்டாடப்படுகிறது.
 
கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம்  பெருகும்.
 
ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்  ஓம் குபேராய நமஹ!
 
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.
 
குபேரன் பற்றிய  சில தகவல்கள்:
 
குபேரன் தோன்றிய நாள்: வியாழக்கிழமை 
ஜனன நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் 
பிடித்த நைவேத்தியம்: ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால், வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள்.
இந்தியாவில் குபேர விக்ரகம் உள்ள இடம்: நாசிக் 
தமிழகத்தில் குபேர விக்ரகம் உள்ள இடம்: மதுரையிலுள்ள திருமங்கலத்தில்தான் முனீஸ்வரர் கோயிலில் குபேர விக்ரகம் தனியாக உள்ளது. 
தனிக்கோயில்: சென்னை அருகே,வண்டலூரில் இரத்தின மங்களத்தில் குபேரருக்கென்றே பிரத்தியேகமாக கோயில் அமைந்துள்ளது மேலும் பிள்ளையார் பட்டி அருகிலும் தனிக்கோவில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :