தொடர்புடைய செய்திகள்
- கெட்ட சக்திகள் நீங்கி செல்வ வளம் பெருக எளிய பரிகார முறைகள் !!
- கெட்ட கனவுகள் வந்தால் செய்யவேண்டிய பரிகார முறைகள் என்ன...?
- சில தவிர்க்கப்படவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!
- ஆவணி மாதத்தில் வரும் பண்டிகைகளும் அதன் பலன்களும் !!
- ஆவணி மாதம் இத்தனை சிறப்புக்கள் மிக்கதாக விளங்குவதற்கான காரணம் என்ன...?
எந்த பொருட்களை தானம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா...?
ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.
வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை). நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.
அடுத்த கட்டுரையில்
