1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சில தவிர்க்கப்படவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!

கோயில் சொத்துக்கள், கோயில் இடங்கள், போன தலைமுறையில் மற்றும் முன் காலங்களில் அது கோயில் இடமாக இருந்தாலும் அந்த இடங்களில் கட்டாயமாக குடியிருப்பு அமைக்கக் கூடாது.
 

தார் சாலைக்கு தாழ்வாக உள்ள இடத்தில வீடு அமையாமல் இருப்பது நல்லது. வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகளின்  நிழல் விழக்கூடாது.
 
அரச மரம், ஆல மரம், புளிய மரம், நாவல் மரம், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், போன்ற மரங்களை வீட்டில் வைக்காமல் இருப்பது மேன்மையை தரும்.
 
ஏரி, குளம், ஆறு, கால்வாய் ஆகியவை ஓரிரு வீதிகள் தள்ளி நமது இல்லம் அமையபெற்றிப்பது நன்மையை தரும். துளசிமாடம் வைத்து வழிபடுவோர் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் வைத்து வழிபடுவது நல்லது.
 
வீட்டிற்குள் மிதியடிகள் போட்டு நடக்கக்கூடாது. கண்ணாடி மணிகள் வீட்டின் முன்பு தொங்க விடுவதை தவிர்க்கலாம். பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பதை தவிர்க்கலாம்.
 
மாய மந்திரம் செய்பவர்களை நம் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள அறைகளை இருட்டாக வைத்திருக்க கூடாது. முன்னோர் படங்களை வரவேற்பு அறையின் வடக்கு பார்த்து வைத்துக் கொள்வது நல்லது.
 
கிரஹ பிரவேச நாள் அந்த வீட்டில் தங்க வேண்டும். ராஜநிலை தலைவாசலில் ஆனி, இரும்பு சம்மந்தப்பட்ட விஷயங்கள் வரக்கூடாது. தலைவாசல் கதவு தேக்கு மரத்தில் அமைப்பது தேக்கம் என்று பொருள்படும். அதனால் தலைவாசலுக்கு தேக்கு மரம் தவிர்க்கப்பட வேண்டும்.