வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கெட்ட கனவுகள் வந்தால் செய்யவேண்டிய பரிகார முறைகள் என்ன...?

சில நேரங்களில் சில கெட்ட கனவுகள் வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்தும், அது பலிக்குமா அல்லது பலிக்கிறதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். 

பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் நம் கனவில் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துகள் சம்பந்தமான கனவுகள் வராது.
 
நோய், வியாதி சம்பந்தமான கனவுகள் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபாட்டு வர வேண்டும். இதற்க்கு ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வதும் நல்லது.
 
பேய், பிசாசு மற்றும் நம் காரியங்கள் தடைபடுவது போல கனவு கண்டால் பிள்ளையாரை வழிபடவேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலையும் படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.
 
பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும். படிப்பு தடைப்படும்படியான கனவுகளை கண்டால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை வழிபாட்டு வரலாம்.
 
காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம். “அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி பெருமாளை வணங்க வேண்டும்.