1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Sugapriya
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (10:45 IST)

ரியோ ஒலிம்பிக் போட்டி: கோலாகல துவக்கம்

ரியோ ஒலிம்பிக் போட்டி: கோலாகல துவக்கம்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமாக தொடங்கியது.





ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரேசில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 207 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் நடக்கும் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் தென் அமெரிக்காவின் கலை பண்பாட்டை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மாரத்தான் வீரர் வாண்டர் லீ லீமா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். இவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள், அபினவ் பிந்த்ரா தலைமையில் அணிவகுத்து சென்றனர். 118 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கில் 85,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யா சார்பில் 271 பேர் பங்கேற்கின்றனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்