ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள் (08/08/2016)


Caston| Last Modified திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (08:52 IST)
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 206 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் வந்துள்ளனர்.

 
 
15 விளையாட்டுகளில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த 118 வீரர், வீராங்கனைகள் களமிரங்க உள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக வீரர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெறும் 6 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு.
 
துப்பாக்கிச் சுடுதல் : அபினவ் பிந்ரா, ககன் நரங் ஆகியோர் 10 மீ துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் பிரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
 
டபிள் டிராப் : இந்திய வீரர்கள் மனாவ்ஜித், செனாய் மாலை 6 மணிக்கு நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில் பங்கேற்கின்றனர்.
 
வில்வித்தை : பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் லக்ஷ்மிராணி மன்ஜிஹி ரவுண்ட் 64 பிரிவில் பங்கேற்கிறார். இந்த போட்டி மாலை 7:27 மணிக்கு நடைபெறும்.
 
ஹாக்கி : ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்கும்.
 
நீச்சல் : பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் பிரிவில் சிவானி கடாரியா மற்றும் ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்.
 


இதில் மேலும் படிக்கவும் :