1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (14:48 IST)

’முதல் பாதிதான் முடிந்திருக்கிறது; இன்னும் மீதி இருக்கிறது’ - சச்சின் டெண்டுல்கர்

ஒலிம்பிக் போட்டியில் பாதிதான் முடிவடைந்திருக்கிறது. இன்னும் பாதி முடிவடையவில்லை. அதில் இந்தியா பதக்கங்கள் வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 

 
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 31ஆவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு எதிர்பார்த்த துப்பாக்கி சுடுதல், வில்வித்தை பல விளையாட்டுகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது. இந்தியா இதுவரை பதக்கப்பட்டியலில் இடம்பெறவில்லை
 
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் குழுவின் நல்லெண்ண தூதராக உள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், “பூமியில் நடைபெறும் மிகப்பெரிய, மிகவும் போட்டித்தன்மையுள்ள விளையாட்டு தொடர் என்றால் அது ஒலிம்பிக் போட்டிதான். ஒரு தேசத்தின் பிரதிநிதியாக பங்கேற்பது என்பது விளையாட்டு காரியமல்ல.
 
ஒவ்வெரு வீரரும் தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கடும் முயற்சி எடுக்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் எனது ஆதரவு உண்டு. ஆண்டாண்டு காலமாக வீரர்கள் அதற்காகத்தான் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
 
ஆனால், துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடையும்போது வருத்தமளிக்கிறது. பாதி போட்டிகள் இன்னும் முடிவடையவில்லை. நீங்கள் நினைத்த முடிவுகள் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.