செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Dinesh
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (23:13 IST)

’ஏமாற்றம்’ : ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தோல்வி

’ஏமாற்றம்’ : ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தோல்வி

ரியோ ஒலிம்பிக் 3-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அபினவ் பிந்த்ரா தங்கம் வெல்வார் என்று இந்திய ஒலிம்பிக் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


 


ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.  துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர்ரைபிள் இறுதி போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

2008-ஆம் ஆண்டு, பெய்ஜிங்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா,  ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் டிராப் பிரிவில் இந்தியாவின் மனவ்ஜித் சிங் சாந்துவும் தோல்வி அடைந்துள்ளார்.