1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sasikala

நடராஜர் சன்னிதிக்கும் மனிதனின் உருவ அமைப்பிற்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இது குறித்த  விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 
மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி  நரம்புகளைக் குறிக்கிறது.
 
கோவிலில் உள்ள 9 வாசல்கள், மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.