திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (15:54 IST)

தமிழ் சினிமாவில் ஒற்றுமை இல்லை– ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் ஒற்றுமை இல்லை’ என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.


 

 
ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரிகளால் தமிழ் சினிமா அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். ஆனாலும், இன்னும் சரியான தீர்வு எட்டப்படவில்லை. கோடம்பாக்கத்தின் மூத்த ஸ்டார் நடிகர்களான கமல், ரஜினி கூட இதைப்பற்றி தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், வளரும் நடிகரான சித்தார்த் கூட இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு ஆசைப்படும் அஜித், விஜய் இருவரும் இதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. இவர்கள் இருவரும்தான் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் மன்னர்கள். “ஜி.எஸ்.டி.க்கு எதிராக அஜித், விஜய் போன்ற நடிகர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? திரையுலகில் பிரச்னை என்றால், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் சினிமாவில் அந்த ஒற்றுமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.