வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (13:50 IST)

சென்னை ஹோட்டலில் சிக்கிய ஹவாலா பணம் – கேரள இளைஞரிடம் விசாரணை !

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் போலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 60 லட்சம் ரூபாய் ஹவாலாப் பணத்துடன் கேரள இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நேற்று சென்னையை அடுத்த மண்ணடியில் உள்ள தனியார் ஹோட்டலில் போலிஸார் திடீர் சோதனை நடத்தினர்.  இதில் கேரளாவைச் சேர்ந்த இலியாசர் என்ற இளைஞரிடம் இருந்து ரூ 60 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அவரிடம் அந்தப் பணத்துக்கான எந்த முறையான ஆவணங்களும் இல்லாததால் அது ஹவாலாப் பணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து அவரையும் கைது செய்த போலிஸார் அவரிடம் இது யாருடையப் பணம், எதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.