ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (09:49 IST)

முதுகெலும்பு இல்லாத திமுக: ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவாக ஜெயகுமார் காட்டம்!

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகதான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாக அதிமுக அமைச்சர் ஜெயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார். 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவு மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 
 
இதன் பின்னர் பாராளுமன்ற மேலவையிலும், மக்களவையிலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று நிறைவேற்றபட்டது. 
 
காஷ்மீர் விவகாரம் விவாதத்துக்கு வந்தபோது, திமுக எம்.பி டி.ஆர். பாலு ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது ஏன் என பாஜவினர் சிந்திக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்த போது எம்.பி ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்தார். 
அப்போது டி.ஆர். பாலு, முதுகெலும்பு உள்ளவர்களுக்காகவே மக்களவை உள்ளது என தெரிவித்தார். அப்போது ரவீந்திரநாத் 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும், இதேபோல் 1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரைவார்த்த கட்சத்தீவை மீட்டுதர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய ஜெயகுமார் கச்சத்தீவை மீடபதில் அதிமுக உறுதியாக உள்ளது என தெரிவித்தார். அதோடு, கச்சத்தீவு விவகாரத்தில் திமுக முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாகவும் விமர்சித்தார். அதோடு திமுகதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என குறிப்பிட்டார்.